பாரிஸில் மாபெரும் போராட்டம்: இன்று 40-க்கும் மேற்பட்ட மெட்ரோ மற்றும் RER நிலையங்கள் மூடல்! (31.10.2026 Ⓒ sci)
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!
வாழ்க்கைச் செலவின அதிகரிப்புக்கு (vie chère) எதிராக இன்று (சனிக்கிழமை, அக்டோபர் 31, 2026) பாரிஸில் மாபெரும் போராட்டம் நடைபெறவுள்ள நிலையில், பொதுப் போக்குவரத்தில் பாரிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. RATP அறிவிப்பின்படி, இன்று 40-க்கும் மேற்பட்ட மெட்ரோ மற்றும் RER நிலையங்கள் மூடப்படுகின்றன.
@AI image
நாள் முழுவதும் மூடப்படும் நிலையங்கள்:
Argentine, Assemblée nationale, Champs-Élysées-Clémenceau, Étoile, Concorde, Franklin Roosevelt, George V, Invalides, Madeleine, Miromesnil, Rue du Bac, Saint-Augustin, Saint-Philippe-du-Roule, Solférino, Sèvres-Babylone, Tuileries, Vaneau மற்றும் Varenne.
காலை 09:00 மணி முதல் மூடப்படும் நிலையங்கள் (Bastille-République பகுதிகள்): போராட்டக் குழுவினர் (intersyndicale) திட்டமிட்டுள்ள பேரணிப் பாதையில் அமைந்துள்ள பின்வரும் நிலையங்கள் காலை 9 மணியிலிருந்து மூடப்படும்:
Bastille, Bréguet-Sabin, Chemin Vert, Filles du Calvaire, République, Saint-François-Xavier மற்றும் Saint-Sébastien – Froissart.
காலை 11:00 மணி முதல் மூடப்படும் நிலையங்கள்:
Chaussées d’Antin – Lafayette, Opéra மற்றும் Pyramides.
நண்பகல் 12:00 மணி முதல் மூடப்படும் நிலையங்கள்:
Bel-Air, Cluny – La Sorbonne, Mabillon, Maubert-Mutualité, Michel Bizot, Odéon, Picpus, Porte de Montreuil, Porte Dorée மற்றும் Saint-Germain-des-Prés.
பகுதியாகப் போக்குவரத்து நிறுத்தப்படும் வழித்தடங்கள்: நிலையங்கள் மூடப்படுவது மட்டுமன்றி, பின்வரும் வழித்தடங்களில் போக்குவரத்தும் முற்றாக நிறுத்தப்படும்:
மெட்ரோ 6: Charles de Gaulle – Étoile மற்றும் Kléber நிலையங்களுக்கு இடையே தொடருந்துகள் இயங்காது.
மெட்ரோ 11: Châtelet மற்றும் Hôtel de Ville இடையே போக்குவரத்து நிறுத்தப்படும்.
டிராம்வே T3a: Porte de Vincennes மற்றும் Stade Charléty இடையே சேவைகள் இருக்காது.
டிராம்வே T3b: Porte de Vincennes மற்றும் Porte des Lilas இடையே போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
இரவு 20:00 மணி முதல் மூடல்:
முக்கிய RER தொடருந்துகள் செல்லும் Châtelet-les-Halles நிலையத்தின் அனைத்துப் வழித்தடங்களும் இரவு 20:00 மணி முதல் முற்றாக மூடப்படும். பயணங்களைத் தொடங்கும் முன் RATP செயலியைச் சரிபார்த்து, இயன்றவரை மாற்று வழிகளைத் திட்டமிடுங்கள்.