உயர் ரக பெட்டை (பிணவல்) நாயுடன், உறவுக்கொள்வதற்காக வந்துதிரியும் சாதாரண நாயொன்றை எரித்துக்கொன்றார் என சந்தேகிக்கப்படும், 65 வயதான நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என யக்கல பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பஹா, மேல் யாகொட பிரதேசத்தில் வீடொன்றில் வளர்க்கப்பட்ட நாயையே மேற்படி நபர், தீ வைத்து எரித்துக்கொன்றார் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
எரித்துக் கொல்லப்பட்ட நாயின் உரிமையாளர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் விசாரணையின் பிரகாரம், வீட்டில் வளர்க்கப்படும் உயர் இன நாயுடன், உறவுக் கொள்வதற்காக சாதாரண நாய் வந்துசெல்கின்றது. இதனால் கோபமடைந்தே, பெற்றோல் ஊற்றி, நாயை எரித்துக்கொண்டதாக கைது செய்யப்பட்டுள்ள நபர் தெரிவித்துள்ளார்.