ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

உள்ளூராட்சி நிறுவனங்களின் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் !

உள்ளூராட்சி நிறுவனங்களின் நிரந்தரமற்ற ஊழியர்கள் அனைவரும் விரைவில் அரச நிரந்தர ஊழியர்களாக்கப்படுவார்கள் என இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (04) கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“நிரந்தர நியமனம் வழங்கப்படாத இந்த 8,400 பேரையும் எதிர்வரும் 15ம் திகதிக்கு முன்னர் நேர்காணல் நடத்தி, பணி மூப்பு அடிப்படையில் உறுதி செய்வதற்கான ஆவணத்தை, 15ம் திகதிக்குள் தயார் செய்ய வேண்டும் என, நேற்று, அனைத்து உள்ளூராட்சி ஆணையாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பிறகு விரைவில் திகதி ஒன்று அறிவிக்கப்பட்டு, நிரந்தர நியமனத்தை பெற்றுத் தருவோம்” என்றார்.

, உள்ளூராட்சி நிறுவனங்களின் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் !

Back to top button