கண்டி – மாத்தளை வீதியில் வேன் ஒன்றுக்கு அருகில் பொலிஸ் பரிசோதகரை கத்தியால் குத்தியதாக கூறப்படும் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர். 46 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
கண்டி பொலிஸ் நிலையத்தின் அவசர அழைப்புப் பிரிவில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர், சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் காரில் கடமையில் ஈடுபட்டிருக்கும் போது இனந்தெரியாதவர்கள் சிலர் அவர்களை தாக்க முயன்றதாக பொலிஸாருக்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.
பின்னர், இந்த முறைப்பாடு தொடர்பில் விசாரிப்பதற்காக பொலிஸ் பரிசோதகர் ஒருவர் மாத்தளை பிரதேசத்தில் காரில் பயணித்த போது சந்தேகத்துக்கிடமான முறையில் காணப்பட்ட வேன் ஒன்றை சோதனை செய்துள்ளார்.
இதன்போது, வேனின் கதவுக்கு அருகில் கத்தியை வைத்திருந்த சந்தேக நபரை விசாரிக்க முயன்ற போது சந்தேக நபர் பொலிஸ் பரிசோதகரை கத்தியால் குத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
, பொலிஸ் பரிசோதகரை கத்தியால் குத்திய சந்தேக நபர் கைது !