செந்தில் கணேஷ் ராஜலக்சுமியின் குரலில் கல்முனை சந்தனேஸ்வரர் புகழ்பாடும் பாடல்.
ஈழமணித்திருநாட்டின் கல்முனை மண்ணில் அமர்ந்திட்ட சிவனாம் சந்தான ஈஸ்வரன் புகழ்பாடும் ”சந்தான ஈஸ்வரர் கானங்கள் ” எனும் 6பாடல்கள் அடங்கிய இசைத்தொகுப்பு வெளியாகியுள்ளது .
இவ்விசைத்தொகுப்பில் தமிழகத்தின் பிரபல பாடகர்களான சின்னமச்சான் ,சாமி சாமி ,ஆத்தா உன்சேலை போன்ற வெற்றி பாடல்களை பாடிய செந்தில் ராஜலக்சுமி ,மற்றும் ஆவிபறக்கும் டீ கடை ,சோழா சோழா (பொன்னியின் செல்வன் ) பாடல்களை பாடிய வீ.எம் மகாலிங்கம் மற்றும் சூப்பர் சிங்கர் புகழ் முத்துசிற்ப்பி ஆகியோருடன் ஈழமண்ணில் பாடகர்கள் கந்தப்பு ஜெயரூபன் ,பிரதா கந்தப்பு ,கந்தப்பு ஜெயந்தன் ஆகியோர் பாடல்களைப்பாடியுள்ளனர் .
இவ்விசைத்தொகுப்பின் பாடல்வரிகளை ஈழமண்ணில் பிரபல பாடலாசிரியர்களான கீழ்கரவை கி.குலசேகரன் ,கவிஞர் வீரா ,வெற்றி துஸ்யந்தன் ,பிரதாபன் தர்மலிங்கம் ,நயினை அன்னைமகன் ,கவிதரன் ஆகியோர் எழுதியுள்ளார்கள்.ஈழத்தின் இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தனின் இசையில் இப்பாடல்கள் வெளிவந்துள்ளன.
சுவிஸ் நாட்டில் வசிக்கும் சின்னய்யா யோகானந்தனின் தயாரிப்பில் இப்பாடல்கள் வெளியீடு செய்யப்பட்டன .பிரபல வர்தகரும் யாழ் பருத்தித்துறை பழவத்தை காளியம்மனின் அறங்காவலர் அமரர் பொன் .சின்னய்யா அவர்களின் ஞாபகார்த்தமாக அவர்மகன் யோகானந்தனின் தயாரிப்பில் இப்பாடல்கள் வெளிவந்துள்ளன.
உலகமெங்கும் எம் பெருமான் சந்தான ஈஸ்வரனின் புகழ் ஓங்கட்டும…ஓம் நமசிவாய
ஈழமணி திருநாட்டின் கல்முனை மண்ணில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் கல்முனை சந்தானேஸ்வரர் ஆலய புகழ் பாடும் . கந்தப்பு ஜெயந்தனின் இசையில் யோகானந்தன் சின்னய்யாவின் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் “சந்தானேஸ்வரர் கானங்கள் ” இசைத்தொகுப்பிலிருந்து இப்பாடல்…
அனைத்து கலைஞர்களுக்கு எமது LankaFire.Com ஊடகத்தின் சார்ப்பில் வாழ்த்துக்கள்..
பாடல் இசை - கந்தப்பு ஜெயந்தன் பாடல் வரிகள் - தர்மலிங்கம் பிரதாபன் பாடியவர்கள் - செந்தில் கணேஷ், ராஜலக்சுமி Music by - kandappu Jeyanthan Singers - Senthil kanesh & rajalaksumi Lyrics - Tharmalingam Pirathapan