பிரான்சில் (France) 2026 ஆம் ஆண்டின் கோடை காலமான (Summer) ஜூன் (June), ஜூலை (July) மற்றும் ஆகஸ்ட் (August) மாதங்களில் வழக்கத்தை விட அதிக வெப்பநிலை (High temperature) நிலவும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாகப் பிரான்ஸ் தேசிய வானிலை நிறுவனமான மெடியோ-பிரான்ஸ் (Météo-France) வெளியிட்டுள்ள புதிய மூன்று (3) மாத காலநிலை முன்னறிவிப்பில் (Weather forecast) தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாட்டின் கிழக்குப் பகுதிகள் (Eastern regions), ஆல்ப்ஸ் (Alps) மலைப்பகுதிகள் மற்றும் மெடிட்டரேனியக் (Mediterranean) கடற்கரைப் பகுதிகளில் அதிக வெப்பம் பதிவாகும் சாத்தியம் அதிகம் எனக் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை முழு கோடை காலமும் (Summer season) தொடர்ந்து வெப்பமாக இருக்கும் என உறுதியாகக் கூற முடியாது என்றும், சில நாட்களில் வழக்கத்தை விட குளிர்ச்சியான (Cooler) காலநிலையும் ஏற்படக்கூடும் என்றும் மெடியோ-பிரான்ஸ் (Météo-France) விளக்கியுள்ளது. மழைப்பொழிவு (Rainfall) தொடர்பில் தெளிவான முன்னறிவிப்பு வழங்க இயலாத நிலை இருப்பதாகவும், பிரான்ஸ் (France) முழுவதும் எந்த ஒரு குறிப்பிட்ட மழைச் சூழலும் தற்போது முன்னுரிமை பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு வசந்தகாலம் (Spring) 1900 ஆம் ஆண்டு முதல் பதிவான காலநிலை வரலாற்றில் மிகவும் வெப்பமான வசந்தமாக இருந்ததாகவும், அதனைத் தொடர்ந்து வரும் கோடை காலமும் சாதாரணத்தை விடச் சூடாக (Hotter than normal) இருக்கக்கூடும் என வானிலை நிபுணர்கள் (Meteorologists) எச்சரிக்கின்றனர்.