பிரான்சில் (France), கடந்த இரண்டாயிரத்து இருபத்தி ஐந்தாம் (2025) ஆண்டில் மட்டும், சுமார் தொண்ணூறாயிரத்து அறுநூறு (90,600) வீடுகளில் புதியதாக நீச்சல் குளங்கள் (Swimming pools) அமைக்கப்பட்டுள்ளன. வழக்கமாக, பிரெஞ்சு மக்கள் தங்களின் கோடை விடுமுறையை (Summer vacation) வெளிநாடுகளில் சுற்றுலா சென்று செலவிடுவது வழக்கம். ஆனால், தற்போது உலகில் நிலவும் போர்ச் சூழல், எரிபொருள் விலை உயர்வு போன்ற உலகளாவிய பிரச்சினைகள், பிரான்ஸ் மக்களின் எண்ணங்களில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளன.

வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வதற்குப் பதிலாக, இந்தக் கோடையைத் தங்கள் வீடுகளிலேயே பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் செலவிடப் பிரான்ஸ் நாட்டவர்கள் பலர் முடிவு செய்துள்ளனர். கோடைக் காலத்தில் குடும்பத்தினருடன் நீச்சல் குளங்களில் குளித்து மகிழ்வதற்காக ஏராளமானோர் தங்களின் வீடுகளிலேயே சொந்தமாக நீச்சல் குளங்களை அமைத்து வருகின்றனர்.
இதன் காரணமாக, கடந்த இரண்டாயிரத்து இருபத்தி ஐந்தாம் (2025) ஆண்டில், தங்கள் வீடுகளில் தனிப்பட்ட முறையில் நீச்சல் குளங்களை அமைத்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை மூன்று புள்ளி ஏழு மில்லியனாக (3.7 Millions) கணிசமாக உயர்ந்துள்ளது. வீடுகளில் நீச்சல் குளங்கள் அமைப்பதற்கு, சாதாரண நீச்சல் குளங்கள் என்றால் ஐயாயிரம் (5,000) முதல் பத்தாயிரம் (10,000) யூரோக்களும் (Euros), உயர்தர நீச்சல் குளங்கள் (Premium pools) என்றால் முப்பதாயிரம் (30,000) முதல் நாற்பதாயிரம் (40,000) யூரோக்களும் செலவாகிறதாம்.