இந்தியாவின் அடுத்த பாதுகாப்புப் படைத் தலைமை அதிகாரியாக தமிழர் நியமனம்
இந்தியாவின் அடுத்த பாதுகாப்புப் படைத் தலைமை அதிகாரி (CDS) பதவிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர் லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்பிரமணி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய ஆயுதப்படைகளின் மிக உயர்ந்த பொறுப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்தப் பதவியில் அவர், தற்போதைய பாதுகாப்புப் படைத் தலைமை அதிகாரியான Anil Chauhan அவர்களை பதிலீடு செய்ய உள்ளார். ஜெனரல் அனில் சௌஹானின் பதவிக்காலம் 2026 மே 30 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

இந்திய இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படைகளுக்கிடையிலான ஒருங்கிணைப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் நீண்டகால இராணுவத் திட்டமிடல்களை மேற்பார்வை செய்வது CDS பதவியின் முக்கிய பொறுப்பாகும். தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கிய முடிவுகளில் இந்தப் பதவி முக்கிய பங்காற்றுகிறது.
N. S. Raja Subramani தனது இராணுவ சேவைக்காலத்தில் பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளதுடன், இந்திய பாதுகாப்புத் துறையில் அனுபவமிக்க அதிகாரியாகப் பார்க்கப்படுகிறார். ஜெனரல் அனில் சௌஹான் ஓய்வு பெறுவதையடுத்து அவர் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்கவுள்ளார்.
இந்த நியமனம் தமிழ்நாட்டில் சிறப்பு கவனத்தை பெற்றுள்ளது. இந்தியாவின் உயரிய பாதுகாப்பு நிலைகளில் ஒன்றிற்கு தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது பெருமைக்குரிய விடயமாக பலரும் பாராட்டி வருகின்றனர்.