“ராப் பண்ணவன் உள்ளே.. ரேப் பண்ணவன் வெளியே!” இதுதான் இன்றைய இலங்கை சட்டத்தின் நிலைமையா? 
கலை, கருத்துச் சுதந்திரம் மற்றும் தனிமனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் ராப் (Rap) இசைக் கலைஞர் சட்டத்தின் பிடிக்குள் முடக்கப்படும் அதே வேளையில், கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களும், பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியவர்களும் மதப்பின்னணி அல்லது அதிகார பலத்தால் மிக எளிதாக வெளியில் நடமாடுகிறார்கள் என்ற பரவலான சமூகக் குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் சட்ட ஒழுங்கு மற்றும் தராசு அனைவருக்கும் சமமாகத்தான் பயன்படுத்தப்படுகிறதா? நாட்டின் நீதித்துறை மற்றும் சட்ட அமலாக்க நடைமுறைகளில் காணப்படும் இந்த முரண்பாடுகள் குறித்த உங்களது கருத்து என்ன?
