பிரான்ஸ் தலைநகர் பாரிசின் (Paris) பதினைந்தாவது (15) வட்டாரத்தில் உள்ள ஒரு ஆடம்பரக் கார் நிறுத்துமிடத்தில் (Conciergerie) கடந்த சனிக்கிழமை இரவு ஒரு பெரும் திருட்டுச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சுமார் பதினைந்து (15) பேர் கொண்ட மர்மக் கும்பல் ஒன்று இந்தப் பார்க்கிங்கிற்குள் (Parking) அதிரடியாக நுழைந்து, பதினேழு (17) விலையுயர்ந்த ஆடம்பரக் கார்களைத் திருடிச் சென்றுள்ளனர்.

இந்தத் திருடர்கள் முதலில் பாதசாரி நுழைவுக் கதவை உடைத்து, பின்னர் வாகனங்கள் வைக்கப்பட்டிருந்த தளத்திற்குச் சென்றுள்ளனர். அங்கிருந்த அலுவலகங்களையும் உடைத்து, கார்களின் சாவிகள் (Keys) மற்றும் பதிவு ஆவணங்களைக் (Registration documents) கைப்பற்றியதாகக் காவல் துறை தெரிவித்துள்ளது. திருடப்பட்ட வாகனங்களில் ஃபெராரி (Ferrari), ஆஸ்டன் மார்ட்டின் (Aston Martin) மற்றும் லம்போர்கினி (Lamborghini) போன்ற உயர்தரக் கார்கள் அடங்கும். “இவை மிகவும் அபூர்வமான மற்றும் விலையுயர்ந்த வாகனங்கள்; காப்பீடு (Insurance) இருந்தாலும் இழப்பீடு முழுமையாகக் கிடைக்குமா என்ற கவலை உள்ளது” என்று தனது ஃபெராரி (Ferrari) காரை இழந்த உரிமையாளர் ஒருவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இந்த மாபெரும் கொள்ளைச் சம்பவம் குறித்துக் கொள்ளைத் தடுப்புப் பிரிவு தீவிரமாக விசாரித்து வருகிறது. இதற்கிடையில், திருடப்பட்ட ரெனால்ட் கேப்டூர் (Renault Captur) கார் ஒன்றைக் காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்; மேலும் அதிலிருந்த நான்கு (4) பேரையும் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அத்துடன், வில்லேஜுஃப் (Villejuif) பகுதியில் திருடப்பட்ட மற்றொரு வாகனம் காலியாக மீட்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.