கலை, கலாசாரம்

கண்டி நீதிமன்ற வளாகத்தில் பதற்றம் !

கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து விசேட பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வழக்கு விசாரணைகள் நிறுத்தப்பட்டு, நீதிமன்ற வளாகத்தில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு, இராணுவம் மற்றும் பொலிஸார் தற்போது தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கண்டி நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் ஜூலை 16ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

, கண்டி நீதிமன்ற வளாகத்தில் பதற்றம் !

Back to top button