இலங்கை செய்திகள்
ஐஸ் போதைப்பொருள் விவகாரம்: 11 மீனவர்களுக்கு நீதிமன்றம் விதித்த தீர்ப்பு
ஐஸ் போதைப்பொருள் விவகாரம்: 11 மீனவர்களுக்கு நீதிமன்றம் விதித்த தீர்ப்பு

இந்திய கடற்பரப்பில் இரண்டு மீன்பிடி படகுகளில் 355 கிலோ ஐஸ் போதைப்பொருளைக் கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 11 இலங்கை மீனவர்களை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை நடத்த கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை (03) உத்தரவிட்டுள்ளது.

11 இலங்கை மீனவர்களும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.








