The Finance நிறுவனத்தில் வைப்பிலிட்டுள்ள 6400 வைப்பாளர்களின் பணத்தை மீளப்பெற்றுக்கொடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் : சாணக்கியன் MP !

த பினான்ஸ் (The Finance) நிதி நிறுவனத்தில் வைப்பிலிட்டுள்ள 6400 வைப்பாளர்களின் பணத்தை மீளப்பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தாமிக்காது உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை (24.07.2024) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது வரையறுக்கப்பட்ட த பினான்ஸ் நிறுவனம் தொடர்பில் கேள்விகளை எழுப்பி உரையாற்றும் போதே பாராளமன்ற உறுப்பினர் இரா .சாணக்கியன் தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
அப்போது 1.5 பில்லியன் ரூபா வருமானம் பெற்றுவந்த நிறுவனமாகவே அது இருந்தது. ஆனால் அந்த நிறுவனத்தில் 6400 வைப்பாளர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு இன்று வரையில் அவர்களுக்கு அந்த நிறுவனத்தினால் ஒரு ரூபாவேனும் வழங்கப்படவில்லை. காப்புறுதி பணம் மட்டுமே கிடைத்துள்ளது. லாபத்தில் இயங்கிய நிறுவனத்தை பொறுப்பேற்று அந்த நிறுவனத்தை 10 வருடங்களில் வங்குரோத்து நிறுவனமாக மாற்றி, இன்று வரையில் வைப்பாளர்களுக்கு பணத்தை வழங்காது இருக்கின்றனர்.
இந்த வைப்பாளர்கள் பெரும் பணக்காரர்கள் இல்லை. சாதாரணமாக ஓய்வூதிய பணம் உள்ளிட்டவற்றை வைப்பிலிட்டவர்களே இருக்கின்றனர். இவர்கள் இறந்த பின்னரா பணத்தை வழங்கப் போகின்றீர்கள்?எந்த முறையிலாவது அவர்களின் பணத்தை மீளக் கொடுங்கள் என தெரிவித்தார்.
இதன்போது பதிலளித்த நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க கூறுகையில்,
இது தொடர்பில் பின்பற்ற வேண்டிய முறைமைகள் உள்ளன. வணிக நீதிமன்றத்தில் வழக்கும் விசாரிக்கப்படுகின்றது. இதில் பின்பற்ற வேண்டிய சட்டதிட்டங்கள் இருக்கின்றன அதன்படியே நடவடிக்கைகள் முன்னெடுக்க்கப்படுகின்றன . இது தொடர்பான நிவாரணங்களை வழங்க அரசாங்கம் என்ற வகையில் தேவையான தலையீடுகளை மேற்கொள்கின்றோம் என்றார்.
, The Finance நிறுவனத்தில் வைப்பிலிட்டுள்ள 6400 வைப்பாளர்களின் பணத்தை மீளப்பெற்றுக்கொடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் : சாணக்கியன் MP !








