கலை, கலாசாரம்

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த மேலும் ஒருவர் கைது

[ad_1]

பாதாள உலக செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட 20 விசேட குழுக்களால் நாடளாவிய ரீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (23) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துருகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, பாதாள உலக கும்பலுடன் தொடர்புகளை பேணியதாக கூறப்படும் மேலும் 37 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த மார்ச் மாதம் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் இதுவரை பாதாள உலக கும்பலைச் சேர்ந்த 3,449 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

[ad_2]
Lankafire

Back to top button