இலங்கை செய்திகள்

ஐவர் படுகொலை : ஒருவர் கைது, வாகனமும் சிக்கியது

ஐவர் படுகொலை : ஒருவர் கைது வாகனமும் சிக்கியது பெலியத்தவில் திங்கட்கிழமை (22) ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு தலைமை தாங்கிய இலங்கையைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன்  அதற்குப் பயன்படுத்திய வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது என பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐவர் படுகொலை

மாத்தறை பிரிவுக்கு பொறுப்பான அதிகாரியின் மேற்பார்வையில் ஹக்மன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் குழு நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் இருந்து இந்த குற்றத்திற்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் சமன் குமார என்ற 54 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐவர் படுகொலை

குற்றத்திற்காக வந்த 65-2615 இலக்கம் கொண்ட மிட்சுபிஷி பெஜேரோ ஜீப்பையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் என  அமைச்சு தெரிவித்துள்ளது.

குற்றத்தை புரிவதற்காக வந்தவர்,  வாகனத்தை செலுத்தி வந்துள்ளார் என    மேலும் தெரியவந்துள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button