இலங்கை செய்திகள்
Trending

சுமந்திரன் – கஜேந்திரன் ; ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்

சுமந்திரன் - கஜேந்திரன் ; ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்

சுமந்திரன் – கஜேந்திரன் ; ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் – ஜெர்மன் தமிழன் குற்றச்சாட்டு!!!

ஜெர்மனியில் வசிக்கும் ஈழத்தமிழரான தரன் என்பவர் அண்மையில் இலங்கையில் அரசியல் பிரமுகர்கள் பற்றிய தனது கருத்தை சமூக வலைத்தளம் ஒன்றில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் தேசியம் சார்ந்து தனது கருத்துக்களை நீண்டகாலமாக வெளிப்படுத்தி வரும் தரண் அவர்கள் சுமந்திரம் மற்றும் கஜேந்திரன் போன்றோர்கள் தமிழ் இன துரோகிகள் என குற்றம் சாட்டியுள்ளார்.

அவர்கள் தற்போது நடக்கவிருக்கும் தேர்தலில் மான் சின்னத்தில் சுயேட்சையாக களமிறங்கியிருப்பவர்களை பார்த்து அஞ்சுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் தெரிவித்த கருத்துக்கள் இதோ…

“யாருக்கு வாக்களிக்க கூடாது? முதலில் சிந்திக்கும் திரணை தமிழர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

போலியாக Tiktok, youtube போன்ற brand name க்கு தமிழ்ப்பெயர் கண்டுபிடிப்பதை நிறுத்தி விட்டு போலி தமிழ் தேசியம் பேசுற சிங்கள கைக்கூலிகள் சுமந்திரன், கஜேந்திரன் எல்லாம் ஒரே ஆட்கள் என்கிற புரிதல் முதலில் உங்களுக்கு தேவை.

இந்த அறிவு கூட இல்லாவிட்டால் வீட்டில் இருக்கும் குப்பையும் நீங்களும் ஒன்று தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். சிங்கள் பிக்குவுடன் உணவுண்டவன், எங்களை கொன்ற army காரங்களுடன் பிரண்டு திரிந்து படம் எடுத்தவன் எல்லாம் “ஊசி” காரன் போல் மக்களை குழப்ப களத்தில் நிற்கிறார்கள்.

அவர்களை கண்டு எல்லாம் பெரிசாக அலட்டி கொள்ள வேண்டாம். மாவீரர்களின் புனித ஆத்மா அவர்களையும் சேர்த்து கவனித்து கொள்ளும். போது நீங்கள் செய்யவேண்டியது சிங்கள தரப்பையும் அவர்களின் கைக்கூலிகளையும் போலி தமிழ்தேசிய வாதிகளையும் கைவிட வேண்டும்.

உங்கள் அடுத்த சந்ததிக்கு ஏதும் பிரச்சனை என்றால் யார் எங்களுக்கு உண்மையாக களத்தில் நின்று வேஷம் போடாமல் குரல் கொடுப்பார்கள் என்பதை நீங்கள் சிந்தித்து வாக்களித்தீர்கள் என்றால் இனம் தப்பும். இல்லையேல் இந்த இனம் இந்த பூமியில் வாழ தகுதி அற்ற இனம் என்று இயற்கையே அழித்து விடும்”

Back to top button