கலை, கலாசாரம்

ஹங்வெல்ல பாலத்திற்கு கீழ் சிக்கிய 30 மில்லியன் ரூபா பெறுமதியான நீர் அளவீட்டு மானி கடற்படையால் மீட்பு !

ஹங்வெல்ல பாலத்திற்கு கீழ் சிக்குண்டிருந்த நீர்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான பெறுமதிமிக்க நீர் அளவீட்டு மானி ஒன்றை கடற்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

சுமார் 30 மில்லியன் ரூபா பெறுமதியான நீர் அளவீட்டு மானியே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

களனி ஆற்றின் நீரின் அளவு, நீரின் வேகம், நீரின் திசை என்பவற்றின் தரவுகளை சேகரிப்பதற்காக, இந்த GPS நீர் அளவீட்டு மானி நீர்பாசன திணைக்களத்தினால் பொருத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கடந்த சில தினங்களாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்குண்டு, இந்த நீர் அளவீட்டு மானி நீரில் அடித்துச் சென்றுள்ளது.

இதையடுத்து, குறித்த GPS நீர் அளவீட்டு மானியை மீட்பதற்கு, நீர்பாசன திணைக்களம், கடற்படையின் உதவியை நாடியுள்ளது.

இதையடுத்து, கடற்படையின் சுழியோடிகள், குறித்த கருவியை கண்டுபிடிப்பதற்கான தேடுதல்களை ஆரம்பித்திருந்தனர்.

கடும் வெள்ள நிலைமையையும் பொருட்படுத்தாது, நீரில் இறங்கி, இந்த கருவியை கண்டுபிடித்துள்ளனர்.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட நீர் அளவீட்டு மானி, நீர்பாசன திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

, ஹங்வெல்ல பாலத்திற்கு கீழ் சிக்கிய 30 மில்லியன் ரூபா பெறுமதியான நீர் அளவீட்டு மானி கடற்படையால் மீட்பு !

Back to top button