கலை, கலாசாரம்

3 வருடங்களுக்கு பின் சேதமடைந்த பொருட்கள் கரையொதுங்கின !

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் சேதமடைந்த சில பொருட்கள் மூன்று வருடங்களின் பின்னர் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாணந்துறை கடற்கரைக்கு அப்பால் இவை காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2021ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பிடித்து எரிந்தது. அதிலிருந்த இரசாயன பொருட்கள் கடலில் கலந்தன. இதனால் கடல் நீரும் சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

கடந்த காலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள கடற்பரப்பில் ஆமைகள் உள்ளிட்ட ஏராளமான கடல்வாழ் உயிரினங்கள் இறந்ததுடன், அவை கடற்ரை பகுதியில் காணப்பட்டன.

, 3 வருடங்களுக்கு பின் சேதமடைந்த பொருட்கள் கரையொதுங்கின !

Back to top button