இலங்கை செய்திகள்
Trending

2025 புதிய கல்வியாண்டிற்கான பாடசாலைத் தவணைகள் வெளியானது

கல்வியமைச்சு அறிவிப்பு

2025 புதிய கல்வியாண்டிற்கான
பாடசாலைத் தவணைகள் பற்றி
கல்வியமைச்சு அறிவிப்பு

நாட்டில் அரச, அரச உதவி பெறும் தனியார் பாடசாலைகளுக்கான 2025 ம் கல்விஆண்டு
க்குரிய பாடசாலை தவணைகள் பற்றிய விபரங்களை கல்வி அமைச்சு அறிவித்து
உள்ளது.

கோவிட் ஆரம்பித்த 2020 முதல் பாடசாலைத் தவணைகள் அந்தந்த ஆண்டுகளுக்குள் முடிவடையாதுஸ்டுத்த ஆண்டு வரை நீடித்தது. ஆனால் 2025 ம் கல்வியாண்டின் பாடசாலைத் தவணைகள் அந்த வருடத்தினுள் முடிவடைவது விசேட அம்சமாகும்.

2025 ம் ஆண்டில் 210 நாட்கள்
பாடசாலை நடைபெற வேண்டுமெனினும் பல்வேறு காரணங்களால் 181 நாட்கள் பாடசாலை நடாத்தப்பட வேண்டுமெனவும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

2025 ம் ஆண்டுக்கான க.பொ.த. சா/த, உ/த, பரீட்சைகள் அவ்வாண்டு ஆகஸ்ட், டிசம்பர் மாதங்களில் நடாத்தப்படுமெனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய தமிழ், சிங்கள பாடசாலைகள்
தொடர்பான தவணைகள் வருமாறு;

முதலாம் தவணை -;

முதல் கட்டம்.:
27.01.2025 முதல் 14.03.2025
இரண்டாம் கட்டம்:
01.04.2025 முதல் 11.04.2025
மூன்றாம் கட்டம்.:
21.04.2025 முதல் 09.05.2025

இரண்டாம் தவணை:
14.05.2025முதல் 07.08.2025

மூன்றாம் தவணை;
முதல் கட்டம்:
18.08.2025 முதல் 17.10.2025
இரண்டாம் கட்டம்:
17.11.2025 முதல் 19.12.2025

முஸ்லிம் பாடசாலைகள்;
முதலாம் தவணை;
முதல் கட்டம்.:
27.01.2025முதல் 28.02.2025
இரண்டாம் கட்டம்;
முதலாம் படி: 01.04.2025 முதல் 11.04.2025
இரண்டாம் படி: 21.04.2025முதல் 23.05.2025

இரண்டாம் தவணை;
28.05.2025 முதல் 19.08 .2025
மூன்றாம் தவணை;
முதலாம் கட்டம்:.
25.08.2025 முதல் 31.10.2025
இரண்டாம் கட்டம்:
17.11.2025 முதல் 19.12.2025

தவணை விடுமுறைகள்;

தமிழ், சிங்கள பாடசாலைகளுக்கு;

15.03.2025 முதல் 31.03.2025
12.04.2025 முதல் 20.04.2025
10.05.2025 முதல் 13.05.2025
08.08.2025 முதல் 17.08.2025
18.10.2025 முதல் 16.11.2025

முஸ்லிம் பாடசாலைகளுக்கு

01.03.2025 முதல் 31.03.2025
12.04.2025 முதல் 20.04.2025
24.05.2025 முதல் 27.05.2025
20.08.2025 முதல் 24.08.2025
01.11.2025 முதல் 16.11.2025

Back to top button