சர்வதேச செய்திகள்

ஈபிள் கோபுரத்திலிருந்து பாராசூட் மூலம் குதித்த இருவர் கைது

2-france-men-detained-for-parachuting-eiffel-tower

ஈபிள் கோபுரத்திலிருந்து பாராசூட் மூலம் குதித்த இருவர் கைது

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் அமைந்துள்ள ஈபிள் கோபுரத்திலிருந்து பாராசூட் மூலம் குதித்த இரண்டுபேரை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.

நேற்று வியாழக்கிழமையன்று, ஈபிள் கோபுரத்தில் 330 மீற்றர் உயரத்திலிருந்து இரண்டு பேர் பாராசூட்டுடன் குதிக்கத் தயாரானதை பாதுகாவலர்கள் கவனித்துள்ளார்கள்.

உடனடியாக அவர்கள் பொலிசாரை அழைக்க, பொலிசார் அவர்கள் இரண்டுபேரையும் தொடர்புகொள்ள முயன்றும் அவர்கள் குதித்துள்ளார்கள்.

அவர்கள் தரையைத் தொட்டதும் கீழே தயாராக நின்ற பொலிசார் அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளார்கள்.

அவர்கள் யார், எந்த நாட்டவர்கள் என்பது தொடர்பான விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

Back to top button