40 அரசாங்க தகவல் அமைப்புகளிடம் அறிக்கை கோரல் !

அமெரிக்காவில் இணைய பாதுகாப்பு அமைப்புகளை வழங்கும் அமைப்பின் மென்பொருளில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்நாட்டிற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய 40 அரசாங்க தகவல் அமைப்புகளின் அறிக்கைகள் கோரப்பட்டுள்ளன.
மைக்ரோசாப்ட் எப்ளிகேஷன்களை அடிப்படையாக கொண்டு தகவல் அமைப்புகள் இயங்குகின்றனவா என்பதை கண்டறிய இந்த அறிக்கைகள் அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுணுபொல தெரிவித்தார்.
மேலும், 4 தனியார் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதிகாரப்பூர்வமற்ற தகவல்களின்படி, இரண்டு வங்கிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் இணைய பாதுகாப்பு அமைப்புகளை வழங்கும் க்ரவுட்ஸ்ட்ரைக் நிறுவனத்தின் பெல்கன் என்ற மென்பொருளில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, உலகின் பல நாடுகளில் உள்ள வங்கிகள், விமான நிலையங்கள் மற்றும் பிற நிறுவனங்களின் செயல்பாடுகள் இன்று (19) கடுமையாக பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
, 40 அரசாங்க தகவல் அமைப்புகளிடம் அறிக்கை கோரல் !









