கலை, கலாசாரம்

வெல்லாவெளி கிராமத்தில்; பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் கதிரைகளும், விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைப்பு

(சித்தா)

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் கிராமங்கள் தோறும் பல்வேறு வேலைத்திட்டங்களை தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து வழங்கி கிராம மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றார். இந்த வகையில் தமிழரசுக் கட்சியின் வெல்லாவெளிப் பிரதேச அமைப்பாளர் பெரியதம்பி பிரதீப்குமாரின் வேண்டுகோளுக்கிணங்க 01.08.2024 ஆம் திகதி வெல்லாவெளிக் கிராமத்தின் குறைநிறைகளைக் கேட்டறிந்து ஆலயம் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு ஒரு தொகுதி கதிரைகளும், விளையாட்டு உபகரணங்களையும் வழங்கினார்.

இந் நிகழ்வில் கிராம சேவகர், சமூமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 

, வெல்லாவெளி கிராமத்தில்; பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் கதிரைகளும், விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைப்பு

Back to top button