கலை, கலாசாரம்

யாழில் ஈவிரக்கமின்றி மனைவிட்யை தீயிட்டு எரித்த கணவன்

[ad_1]

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் குடும்ப பிரச்சினை காரணமாக பெண் ஒருவர் தீயிட்டு எரியூட்டப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) இரவு 11 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

திருமணம் செய்து 10 வருடங்கள் கடந்த நிலையில் குடும்பத்தில் பிரச்சினை அடிக்கடி இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்படும் நிலையில், கணவன் மது போதையில் வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட பின்னர் அறை ஒன்றுக்குள் பூட்டி வைத்து தீயினை மூட்டியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தாயான 28 வயதான பெண் எரிகாயங்களுக்கு உள்ளானவராவார்.

காயமடைந்த பெண் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் கணவன் தப்பி சென்றுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

[ad_2]
Lankafire

Back to top button