கலை, கலாசாரம்

மைத்திரியை பின்பற்றும் அநுர..! உண்மையை உடைத்தார் பொன்னம்பலம்…

மைத்திரியை பின்பற்றும் அநுர..! உண்மையை உடைத்தார் பொன்னம்பலம்...

மைத்திரியை தன் முன்னோடியாக எடுத்து அவருடைய திட்டங்களை நடைமுறைப்படுத்துவோமென ஜனாதிபதி கூறியதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறினார்.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் ஏற்பாடுசெய்யப்பட்ட ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

மைத்திரியை, பின்பற்றும், அநுர, பொன்னம்பலம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் புதிய அரசியல் அமைப்பை கொண்டு வருவதாக அறிவித்துள்ளார்.

அந்த அரசியல் அமைப்பில் 2015 நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற மைத்திரி பால சிறிசேன- ரணில் கொண்டு வந்த இடைக்கால அறிக்கையை கொண்டு வரும் திட்டம் இருப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.அந்த திட்டத்தில் தெளிவாக இந்த அரசியலைப்பானது ஒற்றையாட்சி என்பதை குறிப்பிடுகின்றது. 2017முதல் நாங்கள் தெளிவாக மக்களுக்கு சொல்லி வருகின்றோம்.

வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்திய 18 பாராளுமன்ற உறுப்பினர்களில் 16பேர் தமிழ்த்தேசிய கூட்டமைபின் பாராளுமன்ற உறுப்பினர்கள் .16பேரும் இடைக்கால அரசியல் அமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள்.

ஒற்றையாட்சி முறையை 2015ல் இருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்து இருப்பது என்பது இனத்திற்கு ஒரு சாபக்கேடாகும்.

2015ல் இருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மீண்டும் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுவார்களானால் அறுதி பெரும்பான்மையுடனும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்புடனும் நிறைவேற்றப்பட்டதாக ஜனாதிபதி காட்டிக்கொள்வார்.

தமிழர் அரசியலை ஒற்றையாட்சிக்குள் முடக்கும் செயற்பாட்டுக்கு தமிழரசுக்கட்சி சொல்வது,  குறித்த அரசியலைப்பில் சமஷ்டி இல்லை என்பதை மக்கள் மத்தியில் மூடி மறைப்பதற்கு பெயர்ப்பலகை முக்கியம் இல்லை உள்ளடக்கம் தான் தேவை என்கிறார்கள்.இப்படி சொல்பவர்கள் சாதாரண ஆட்கள் இல்லை ஜனாதிபதி சட்டத்தரணி என்று தன்னை காட்டிக்கொள்பவரால் மாத்திரமே செய்ய முடியும்.

தமிழரசுக்கட்சி இந்த அரசியலமைப்பை தாம் தான் தயாரித்தது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். இந்த வரலாற்று துரோகங்களை செய்தவர்களில் சம்மந்தன், சுமந்திரன், சித்தார்த்தன் உள்ளடக்கம் .

சுமந்திரனின் செயற்பாட்டை விடுதலைப்புலிகளின் தத்துவ ஆசிரியராக இருக்கக்கூடிய அன்ரன் பாலசிங்கத்திற்கு ஒப்பிட்ட சிறீதரன் கடந்த காலங்களில் நியாயப்படுத்தி இருக்கின்றார்.

இவர்கள் முழுப்பெயரும் மக்களால் நிராகரிக்கப்படவேண்டும் அத்துடன் வடக்கு கிழக்கில் மக்கள் அறுதிப்பெரும்பான்மையை சைக்கிள் சின்னத்திற்கு வழங்கி குறைந்தது 10பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றார்.

 

 

Back to top button