கலை, கலாசாரம்
இலங்கையில் 9 ஆவது ஜனாதிபதி தேர்தல்; பலத்த பாதுகாப்புடன் வாக்கு பெட்டிகள் அனுப்பிவைப்பு

[ad_1]
இலங்கையில் 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் நாளை(21) இடம்பெறவுள்ள பலத்த பாதுகாப்புடன் வாக்கு பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை சனிக்கிழமை (21) காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை இடம்பெறவுள்ளது.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக நாடளாவிய ரீதியில் வாக்கு பெட்டிகள் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட இலங்கை ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான நாடளாவிய ரீதியில் இடம்பெற இருக்கின்றது.
இம்முறை தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
[ad_2]
Lankafire








