கலை, கலாசாரம்

200 கிலோ போதைப்பொருளுடன் 6 பேர் கைது !

நேற்று (25) இலங்கைக்கு மேற்கே சுமார் 121 கடல் மைல் தொலைவில் கடலில் உள்ள கப்பலொன்றை சோதனையிட்டதில், போதைப்பொருளுடன் 6 சந்தேகநபர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட படகில் 200 கிலோகிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதோடு, அதில் ஐஸ் போதைப்பொருள் 120 கிலோகிராமும், ஹெரோயின் 80 கிலோகிராம் ஆகும்.

குறித்த போதைப்பொருட்களுடன் மீட்கப்பட்ட கப்பல் இன்று (26) காலை திக்கோவிட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டமை குறிப்பிட்டதக்கது.

, 200 கிலோ போதைப்பொருளுடன் 6 பேர் கைது !

Back to top button