கலை, கலாசாரம்

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த நான்கு விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு : 11 பெண்கள் கைது!

பொலன்னறுவை ஹபரணை பிரதேசத்தில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த நான்கு விபச்சார விடுதிகளை பொலிஸார் சுற்றிவளைத்த போது நான்கு உரிமையாளர்கள் உட்பட 11 பெண்கள் கைது செய்யப்பட்டதாக பொலன்னறுவை பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.

பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நான்கு உரிமையாளர்களும் மொனராகலை , சிகிரியா, கம்பஹா, மஹியங்கனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் 19 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் கைது செய்யப்பட்ட 11 பெண்கள் திம்புலாகல தலுகன, ஹபரணை, களனி, மொனராகலை, புனானை, அநுராதபுரம் மற்றும் வெல்லவாய பிரதேசங்களைச் சேர்ந்த 19, 27, 33, 47, 33,48 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர் .

கைது செய்யப்பட்ட உரிமையாளர்கள் இந்த 11 பெண்களுக்கும் குறைந்த பணத்தை வழங்கி அதிக பணம் சம்பாதித்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், இந்த மசாஜ் நிலையங்கள் நீண்டகாலமாக இயங்கி வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

, மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த நான்கு விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு : 11 பெண்கள் கைது!

Back to top button