கலை, கலாசாரம்

மண் மேடு இடிந்து விழுந்ததில் மூன்றரை வயது குழந்தை பலி !

கேகாலை, மங்களகம குருந்திய கிராமத்தில் வீடொன்றுக்கு அருகாமையில் இடிந்து விழுந்த மண் மேட்டில் சிக்கி மூன்றரை வயது குழந்தை நேற்று (04) உயிரிழந்துள்ளது.

கவிந்து ஷெஹந்தா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

குழந்தையின் வீட்டின் பின்புறம் பாதுகாப்புச் சுவர் அமைப்பதற்காக நேற்று காலை வடிகால் வெட்டப்பட்ட நிலையில், இறந்த குழந்தை வடிகாலில் விளையாடிக் கொண்டிருந்த போது, ​​அதற்கு மேல் இருந்த மண் அடுக்கு அவரது உடலில் சரிந்து விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் அயலவர்களின் உதவியுடன் குழந்தையை மீட்டு கேகாலை போதனா வைத்தியசாலையில் அனுமதித்த போது குழந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

, மண் மேடு இடிந்து விழுந்ததில் மூன்றரை வயது குழந்தை பலி !

Back to top button