மட்டக்களப்பு மாவட்ட வேலையில்லா பட்டதாரிகளின் 5வது நாள் தொடர் போராட்டம்

(செங்கலடி நிருபர் சுபா)
கிழக்கு மாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்குமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் இன்று சனிக்கிழமை(6) ஐந்தாவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபிக்கு முன்பாகவே இந்தக் கவன ஈர்ப்பு போராட்டம் இன்று பி.ப முன்னெடுக்கப்பட்டது.
பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாதைகைகளை தாங்கியவாறும் கறுப்பு பட்டியணிந்தும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் சிலர் தமது கைக் குழந்தைகளுடன் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
கடந்த இரண்டாம் திகதி ஆரம்பமான தொடர்போராட்டம் இன்று ஐந்தாவது நாளாகவும் தொடர்ந்தது.
சுமார் 80 வேல்லையில்லா பட்டதாரிகள் இன்றைய போராட்டத்தின் போது கலந்துகொண்டிருந்தனர்.
5நாட்களாக நாம் இங்கு உள்ளோம் எமது பிரச்சினை தொடர்பில் இதுவரை யாரும் கவணம் செலுத்தவில்லை, வறுமையில் படித்து பட்டம் பெற்றோம்,
ஏனைய மாவட்டங்களில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படும் நிலையில் கிழக்கு மாகாணத்தில் மட்டும் நியமனங்கள் வழங்கப்படாத நிலை காணப்படுவதாகவும் இது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுனர் உட்பட அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகள் வலியுறுத்தியிருந்தனர்.
, மட்டக்களப்பு மாவட்ட வேலையில்லா பட்டதாரிகளின் 5வது நாள் தொடர் போராட்டம்






















