கலை, கலாசாரம்

மட்டக்களப்பில் தொழில்‌ மற்றும்‌ வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால்‌ ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் சேவை !!

தொழில்‌ மற்றும்‌ வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால்‌ நாடு  முழுவதும்‌ நடாத்தப்படும்‌ “வெல்வோம்‌ ஸ்ரீலங்கா” நிகழ்ச்சித்திட்டத்தின்‌ மட்டக்களப்பு மாவட்டத்திற்கான நடமாடும்‌ சேவையானது எதிர்வரும்‌ 28,29 ஆம்‌ (வெள்ளி, சனி) திகதிகளில்‌ மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில்‌ இடம்பெற உள்ளது.

தொழில்‌ திணைக்களத்தால்‌ வழங்கப்படும்‌ பின்வரும்‌ சேவைகளை இங்கு பெற்றுக்‌ கொள்ள முடியும்‌.

* ஊழியர்களை பதிவு செய்தல்

*B பத்திரங்களை வழங்குதல்‌

*பின்னுரித்தாளிகள்‌ மாற்றம்‌ செய்தல்‌

*ஓய்வுக்கு முன்னரான ஊ.சே.நி மீளளிப்பு நலன்களை பெற்றுக்கொள்வது தொடர்பான அறிவுறுத்தல்கள்‌

*30% மீளளிப்பு நலனுக்கான உரித்துடமையை பரீட்சித்தல்‌

.ஊ.சே.நிதியை பிணையாக வைத்து வீட்டுக்கடன்‌ பெற்று கொள்வது தொடர்பான அறிவுறுத்தல்கள்‌ வழங்குதல்‌

*ஓய்வூதிய மீளளிப்பு நலன்களை பெற்றுக்கொள்வது தொடர்பான அறிவுரை

*. இறந்த ஊழியர்களின்‌ பின்னுரித்தாளிகளுக்கு ஊ.சே.நிதிய மீளளிப்புகளை பெற்றுக்கொள்ளல்‌ தொடர்பான அறிவுரை

* மற்றும்‌ பிற சேவைகளையும்‌ பெற்றுக்‌ கொள்ள முடியும்‌ .

(மேலதிக தகவல்களுக்கு  மாவட்ட தொழில்‌ அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்‌)

25, புதிய வீதி,
மட்டக்களப்பு.

தொ .பே  0652222151

, மட்டக்களப்பில் தொழில்‌ மற்றும்‌ வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால்‌ ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் சேவை !!

Back to top button