
ஜாஎல அதிவேக வீதிக்கு அருகில் உள்ள சேற்று நிலத்தில் இருந்து பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
50 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் கடுவலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரியொருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








