கலை, கலாசாரம்

அம்பாறையில் உறுமய காணி உறுதிப்பத்திரம் வழங்குவதற்கான நடமாடும் சேவை ஆரம்பம் !

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் ஜனாதிபதியின் 20இலட்சம் உறுமய காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் வேலைத் திட்டத்தினை துரிதப்படுத்தும் நோக்கில் இன்று நடமாடும் சேவை ஆரம்பிக்கப்பட்டது.

ஆரம்ப நிகழ்வானது திருக்கோவில் பிரதேச செயலக காணிப் பிரிவின் ஒழுங்கமைப்பில் திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலக காணி பிரிவின் காணி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவை நிருவாக உத்தியோகத்தர், காணிப் பிரிவின் உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர். அரச காணிகளை வைத்திருப்பவர்களுக்கு நடமாடும் சேவையின் ஊடாக உறுமய காணி உறுதிகளைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் இச் சேவை முன்னெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேசத்திலும் உறுமய காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் வேலைத்திட்ட நடமாடும் சேவை இன்று முன்னெடுக்கப்பட்டது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றதோடு, நடமாடும் சேவையில் காணி உத்தியோகத்தர் லோஜினி கோகுலன், காணிப்பிரிவு உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் எதிர்வரும் 30ஆம் திகதிவரை நடமாடும் சேவையானது இடம்பெறவுள்ளதுடன் அத்தினங்களில் குறித்த ஆவணங்களுடன் வருகை தந்து காணி அளிப்பினை பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டதோடு, காணி பிணக்குகள் உள்ளவர்களுக்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

, அம்பாறையில் உறுமய காணி உறுதிப்பத்திரம் வழங்குவதற்கான நடமாடும் சேவை ஆரம்பம் !

Back to top button