இலங்கை செய்திகள்
பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு..! வத்தேகம பகுதியில் கொலை?
பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு..! வத்தேகம பகுதியில் கொலை?

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வத்தேகம பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை உயிரிழந்த வீதி விபத்து தொடர்பில் தேடப்பட்டு வந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்ட காருடன் காரின் சாரதியும் மாத்தளையில் நேற்று கைது செய்யப்பட்டதாகவும், காரை மறைப்பதற்கு அவருக்கு உதவிய மற்றுமொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் 46 மற்றும் 48 வயதுடைய மாத்தளை மற்றும் உதிஸ்பத்துவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.
சந்தேக நபர்கள் தொடர்பில் வத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








