பேருந்தில் வைத்து இளம் பெண்ணின் கூந்தலை வெட்டியவர் கைது

பயணிகள் பேருந்தில் இளம் பெண்ணொருவரின் கூந்தலின் ஒரு பகுதியை வெட்டிய மௌலவி என கூறப்படும் நபரை கண்டி பொலிஸார் நேற்று (13) கைது செய்துள்ளனர்.
கண்டி – வத்தேகம வீதியில் பயணித்த பேருந்தில் தமது பின் ஆசனத்தில் அமர்ந்திருந்த சந்தேகநபர், தனது கூந்தலின் ஒரு பகுதியை கத்திரிக்கோலால் வெட்டியதாக 26 வயதுடைய மடவளையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கண்டி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
கட்டுகஸ்தோட்டை – வட்டாரதென்ன சந்திக்கு அருகில் சந்தேகநபரால் கூந்தல் வெட்டப்பட்டதைக் கண்ட அந்த இளம் பெண் அலறி அடித்துக்கொண்டு பேருந்தில் பயணித்த ஏனைய பயணிகளின் உதவியை நாடியுள்ளார்.
அப்போது, பேருந்தின் நடத்துனர் மற்றும் பயணிகள் பலர் வந்து சந்தேககநபரை மடக்கி பிடித்துள்ளனர்.
பின்னர், சந்தேக நபரை அதே பேருந்தில் அழைத்து சென்று கண்டி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
, பேருந்தில் வைத்து இளம் பெண்ணின் கூந்தலை வெட்டியவர் கைது