கலை, கலாசாரம்

பொடிமெனிக்கே ரயில் திடீர் தீப்பிடிப்பு !

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த பொடிமனிக்கே ரயில் இலக்கம் 1006 இன் எஞ்சின் ஹப்புத்தளை ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று (3) தீப்பற்றி எரிந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 8.50 மணியளவில் பதுளை ரயில் நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணத்தை ஆரம்பித்த பொடிமெனிக்கே ரயிலில் பெருமளவிலான பயணிகள் ஏற்கனவே ரயிலினுள்ளே இருந்ததாகவும், தீயினால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் ரயில்வே திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இரண்டு எஞ்சின்களுடன் அமைக்கப்பட்ட புதிய ரயிலான பொடிமெனிக்கே, தியத்தலாவ நிலையத்தை கடந்து ஹப்புத்தளை நிலையத்தை நெருங்கும் போது, ​​அதன் பின் எஞ்சினில் தீ பரவியதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து ஹப்புத்தளை கனிய எண்ணெய் வள கூட்டுத்தாபனத்தின் தீயணைப்பு ஊழியர்கள், ஹப்புத்தளை பொலிஸார் மற்றும் ரயில்வே ஊழியர்கள் ஒன்றிணைந்து தீயணைப்பு இயந்திரங்களைப் பயன்படுத்தி எஞ்சினில் பரவிய தீயை அணைத்தனர்.

எஞ்சினை சரிசெய்த பின்னர் பொடிமெனிக்கே சில மணித்தியாலங்கள் தாமதத்தின் பின்னர் மீண்டும் ஹப்புத்தளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

, பொடிமெனிக்கே ரயில் திடீர் தீப்பிடிப்பு !

Back to top button