பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்திற்கு தடைஆறு மாதமாக நீட்டிப்பு – இலங்கை மத்திய வங்கி
பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்திற்கு தடை ஆறு மாதமாக நீட்டிப்பு - இலங்கை மத்திய வங்கி

பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை ஞாயிற்றுக்கிழமை (5) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் வங்கியல்லாத நிதி நிறுவன கண்காணிப்பு திணைக்களம் ஞாயிற்றுக்கிழமை (5) விசேட ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பதிவு செய்யப்பட்ட பங்குத்தொகுதி மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டம் என்பவற்றின் கீழான ஒழுங்கு விதிகளின் நியதிகளுக்கு அமையவும்,
மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுவரும் புலனாய்வுகளைத் தொடரும் வகையிலும் பெர்பெட்சுவர் ட்ரசரீஸ் லிமிடெட் அதன் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், முதனிலை வணிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் விதிக்கப்பட்டிருந்த இடை நிறுத்த தீர்மானத்தை ஞாயிற்றுக்கிழமை (5) மாலை 04.30 மணியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் மேலும் ஆறு மாத காலப்பகுதிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.








