கலை, கலாசாரம்

பெண்ணின் தங்க நகையை திருடியவர் பொலிஸ் கான்ஸ்டபிளின் கையை பிளேட்டால் வெட்டிவிட்டுத் தப்பியோட்டம் !

கதிர்காமம் வள்ளி அம்மன் ஆலயத்திற்கு அருகில் பெண்ணொருவரின் தங்க நகையை திருடிய சந்தேக நபர் ஒருவரை பிடிக்க முற்பட்ட போது சந்தேக நபர் பொலிஸ் கான்ஸ்டபிளின் கையை பிளேட்டால் வெட்டியுள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த கான்ஸ்டபிள் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர் கதிர்காமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர் என்பதுடன் கதிர்காமம் விகாரையின் பெரஹரா நிகழ்வின் போது குறித்த கான்ஸ்டபிள் கடமையில் இருந்ததாக தெரியவந்துள்ளது.

வள்ளி அம்மன் ஆலயத்திற்கு அருகில் பெண் ஒருவரிடமிருந்து தங்க நகையை சந்தேகநபர் திருடிச் செல்வதைக் கண்ட கான்ஸ்டபிள், சந்தேக நபரை கைது செய்ய முற்பட்ட போது, சந்தேக நபர் கையிலிருந்த பிளேட்டால் கான்ஸ்டபிளின் இடது கையை வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

, பெண்ணின் தங்க நகையை திருடியவர் பொலிஸ் கான்ஸ்டபிளின் கையை பிளேட்டால் வெட்டிவிட்டுத் தப்பியோட்டம் !

Back to top button