கலை, கலாசாரம்

பாடசாலை மாணவர்களுக்கு கேரள கஞ்சா விற்பனை செய்தவர் கைது !

நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு கேரள கஞ்சாவினை சூட்சுமமாக விற்பனை செய்து வந்த குடும்பஸ்தரை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை மக்பூலியா பகுதியில் நேற்று(29) இரவு கேரளா கஞ்சா விற்பனை இடம்பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினை பின்தொடர்ந்து பொலிஸார் பெரும் சிரமத்திற்கு மத்தியில் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 36 வயதுடைய குடும்பஸ்தர் என்பதுடன் அவர் வசம் இருந்து 11,100 மில்லி கிராம் கேரளா கஞ்சாவினை பொலிஸார் மீட்டுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க தலைமையிலான பொலிஸார் மேற்கொண்டுள்ளதுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

, பாடசாலை மாணவர்களுக்கு கேரள கஞ்சா விற்பனை செய்தவர் கைது !

Back to top button