கலை, கலாசாரம்
பயிற்சி வகுப்புக்கு சென்ற 14 வயது 3மாணவிகள் மாயம் !

கம்பஹா யக்கல பிரதேசத்தில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்காக சென்ற 14 வயதுடைய மூன்று மாணவிகள் நேற்று முதல் காணாமல் போயுள்ளதாக யக்கல மற்றும் வீரகுல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காணாமல் போன மூன்று மாணவர்களும் கம்பஹா யக்கல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 9 இல் கல்வி கற்கும் நண்பர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் மூவரும் கடந்த புதன்கிழமை இரவு வரை வீட்டுக்கு வரவில்லை என தெரிவித்து பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.
காணாமற்போன மூன்று மாணவர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ள யக்கல மற்றும் வீரகுல பொலிஸார்
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
, பயிற்சி வகுப்புக்கு சென்ற 14 வயது 3மாணவிகள் மாயம் !









