கலை, கலாசாரம்
பதில் பொலிஸ்மா அதிபர் பதவிக்கு மூன்று பேரின் பெயர்கள் பரிந்துரை !

தேசபந்து தென்னக்கோன் பொலிஸ் மாஅதிபராக கடமையாற்றுவதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில், பதில் பொலிஸ்மா அதிபர் பதவிக்கு மூன்று பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பதிநாயக்க, சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் சஞ்சீவ தர்மரட்ன ஆகியோரின் பெயர்கள் இவ்வாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தீர்மானத்திற்கு அமைய இந்த சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்களில் ஒருவர் பதில் பொலிஸ் மாஅதிபராக நியமிக்கப்படுவார் என பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
, பதில் பொலிஸ்மா அதிபர் பதவிக்கு மூன்று பேரின் பெயர்கள் பரிந்துரை !








