நெல் கொள்வனவுக்காக சலுகை வட்டியில் கடன் !

விவசாயிகளிடமிருந்து நியாயமான விலையில் நெல்லை கொள்வனவு செய்வதை உறுதிப்படுத்தும் வகையில், 2024 சிறுபோக நெல் கொள்வனவுக்காக சலுகை வட்டியில் கடன் வழங்கப்படவுள்ளது. சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு இக்கடனை சலுகை வட்டியில் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அந்த வகையில் நெல் ஆலை உரிமையாளர்களுக்கு 50 மில்லியன் ரூபாவையும், நெல் களஞ்சியசாலை உரிமையாளர்கள் மற்றும் மொத்த நெல் கொள்வனவாளர்களுக்கு 25 மில்லியன் ரூபாவையும் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வங்கிகள் மூலம் 13 வீத வருடாந்த வட்டிக்கு இந்த கடன்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவிக்கின்றது.
இந்த வட்டியில் 9 வீதத்தை கடன் பெற்றுக் கொள்வோர் செலுத்த வேண்டியுள்ளதுடன் மீதமான 4 வீதத்தை வட்டி நிவாரணமாக வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இக்கடனை 180 தினங்களுக்குள் வழங்கி நிறைவு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
, நெல் கொள்வனவுக்காக சலுகை வட்டியில் கடன் !









