கலை, கலாசாரம்

நாட்டை மீட்டெடுத்துள்ள ஜனாதிபதி ரணிலுக்கு மேலும் 5 ஆண்டுகள் வழங்க வேண்டும்: அலி சப்ரி !

நாட்டை மீட்டெடுத்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பொருளாதாரத்தை மேம்படுத்த மேலும் ஐந்தாண்டுகள் வழங்கப்பட வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டுவந்துள்ளமை தொடர்பில் சர்வதேச சமூகம் மத்தியில் சிறந்த கௌரவம் காணப்படுகின்றது.

எவரும் எதிர்பாராத வேகத்தில் நாம் அதை செய்துள்ளோம்.இது பற்றி அறிய பலரும் ஆர்வமாக உள்ளனர்.தேர்தலுக்கு பிறகு இது நடக்குமா என்ற கேள்வியும் எழுப்பட்டு வருகின்றது.

நாட்டை மீட்டெடுத்த தலைவர்தான் ரணில் விக்கிரமசிங்க.எனவே, நிலையானதொரு பொருளாதாரத்தை ஏற்படுத்த அவருக்கு மேலும் ஐந்தாண்டுகள் வழங்கப்பட வேண்டும்.அடுத்த ஜனாதிபதி தேர்தலே இலங்கையின் தலைவிதியை நிர்ணயிக்கும்.

எனவே, உணர்வு அரசியலுக்கு பதிலாக வேலைத்திட்டங்கள் உடைய அரசியலுக்கே ஆதரவு வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

, நாட்டை மீட்டெடுத்துள்ள ஜனாதிபதி ரணிலுக்கு மேலும் 5 ஆண்டுகள் வழங்க வேண்டும்: அலி சப்ரி !

Back to top button