கலை, கலாசாரம்
நாட்டில் ஏற்பட்ட பிளவுகளைக் குறைக்க அயராது பாடுபட்டவர் இரா. சம்பந்தன் : ஜனாதிபதி !

இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரான இரா. சம்பந்தனின் மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுதாபம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது: இரா. சம்பந்தனின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு தேசியத் தலைவராக நம் நாட்டில் ஏற்பட்ட பிளவுகளைக் குறைக்க அயராது பாடுபட்டார். அவரது இழப்பிற்கு நாடு முழுவதும் இரங்கல் தெரிவிக்கும்.சம்பந்தனின் அரசியல் அனுபவங்கள் வளரந்து வரும் இளைய தமிழ் அரசியல்வாதிகளுக்கு முன்னுதாரணமாக அமையும். இவ்வாறு ஜனாதிபதி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
, நாட்டில் ஏற்பட்ட பிளவுகளைக் குறைக்க அயராது பாடுபட்டவர் இரா. சம்பந்தன் : ஜனாதிபதி !








