கலை, கலாசாரம்

பெண் பாலியல் வன்கொடுமை; தெலுங்கானாவில் பதற்றம்

[ad_1]

தெலுங்கானாவில் பழங்குடியினப் பெண்ணொருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.

ஆஷிபாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரே வேறு மதத்தைச் சேர்ந்த முச்சக்கரவண்டிச் சாரதி ஒருவரினால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக அங்குள்ள கடைகள் மற்றும் வீடுகளை நெருப்பு வைத்து எரித்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், அப்பகுதி கலவர பூமியானதை அடுத்து அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[ad_2]
Lankafire

Back to top button