கலை, கலாசாரம்

துப்பாக்கி வெடித்து 7 வயது சிறுமி காயம் !

மகுலுகஸ்வெவ, தேவஹூய பிரதேசத்தில் வீடொன்றிற்குள் துப்பாக்கி ஒன்று வெடித்ததில் ஏழு வயது சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளார்.

வீட்டை சுத்தம் செய்யும் போது துப்பாக்கி தரையில் விழுந்து வெடித்ததில் இவ் விபத்து ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த சிறுமி சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த துப்பாக்கி உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி எனத் தெரிவிக்கப்படுகிறது.

, துப்பாக்கி வெடித்து 7 வயது சிறுமி காயம் !

Back to top button