கலை, கலாசாரம்

ஜனாதிபதி தேர்தலை இடைநிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆராயும் நடவடிக்கை ஆரம்பம் !

ஜனாதிபதி தேர்தலை இடைநிறுத்தக் கோரி சட்டத்தரணி அருண லக்சிறியினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை பிரதம நீதியரசர் உட்பட மூவரடங்கிய நீதியரசர் குழாம் தற்போது ஆரம்பித்துள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, அர்ஜுன ஒபேசேகர மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று திங்கட்கிழமை (15) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் முறையான முறையில் நிறைவேற்றப்படாததால், அதனை சர்வஜன வாக்கெடுப்புக்கு அனுப்பி, அதனை அங்கீகரிக்கும் வரை , ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதன் மூலம் அரசியலமைப்பு மீறப்படுவதாக தீர்ப்பளிக்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனுவில் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

, ஜனாதிபதி தேர்தலை இடைநிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆராயும் நடவடிக்கை ஆரம்பம் !

Back to top button