கலை, கலாசாரம்

ஆலய 60 பவுண் நகைகள் மாயம் : மக்கள் போராட்டம் !

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புளியங்கூடல் இந்தன் முத்து விநாயகர் ஆலயத்தில், சுமார் 60 பவுன்களுக்கு மேற்பட்ட நகைகள் காணாமல் போனமை தொடர்பில், உரிய விசாரணை நடத்தக் கோரி, அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இன்று காலை 10.00 மணியளவில், புளியங்கூடல் சந்தியில் இருந்து ஆரம்பமான பேரணி, பிரதான வீதி வழியாக, இந்தன் முத்து விநாயகர் ஆலயத்தை அடைந்தது.

ஆலய வாயிலில் சிதறு தேங்காய் உடைத்து, மக்கள் தமது போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்த விடயம் தொடர்பில், ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் சதீசன் மஞ்சுளாதேவியை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட போது, ஆலய நகைகள் பணம் காணாமல் போனமை தொடர்பில், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸாரால் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

, ஆலய 60 பவுண் நகைகள் மாயம் : மக்கள் போராட்டம் !

Back to top button