கலை, கலாசாரம்
தேர்தலை ஒத்திவைப்பது ஜனநாயகத்திற்கும் பொருந்தாது : நாமல் ராஜபக்ஷ !

தேர்தலை ஒத்திவைப்பது ஜனநாயகத்திற்கும் பொருந்தாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நெலும் மாவத்தையில் இன்று இடம்பெற்ற நிகழ்விலேயே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் நீடிப்பு என்பது ஜனநாயக நாட்டின் அடிப்படை கொள்கைகளை சேதப்படுத்தியுள்ளது.
அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருந்த போது உரிய நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்பட்டதாகவும் தேர்தல்கள் எந்த வகையிலும் பிற்போடப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஒரு நாட்டின் ஸ்திரத்தன்மை என்பது மக்களின் விருப்பத்தினாலேயே ஏற்பட வேண்டுமே தவிர அவர்களின் குரலை தாமதிப்பதன் மூலம் அல்ல எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
, தேர்தலை ஒத்திவைப்பது ஜனநாயகத்திற்கும் பொருந்தாது : நாமல் ராஜபக்ஷ !









