கலை, கலாசாரம்

கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு ஜனாதிபதி சுற்றாடல் வெள்ளி விருது!

(வி.ரி. சகாதேவராஜா)

கல்முனை ஆதார வைத்தியசாலை 2024ம் ஆண்டுக்கான ஜனாதிபதி சுற்றாடல் போட்டியில் அரச நிறுவனங்களுக்கான பிரிவில் பங்குபற்றி வெள்ளி விருதினை பெற்றுக்கொண்டது.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்றுமுன்தினம் (28) இடம்பெற்ற நிகழ்வில் மேற்படி விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இவ்விருதினை வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ். சந்திரசேன அவர்கள் பெற்றுக்கொண்டார்.

இவ் வைத்தியசாலை சுற்றாடல் பாதுகாப்பு செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் அதேவேளை ஜனாதிபதி சுற்றாடல் விருதுகளை தொடர்ச்சியாக பெற்று வருகின்றது.

அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு பாராட்டு சான்றிதழையும் 2021 2022 ஆம் ஆண்டுக்கான மெரிட் விருதினையும், இம்முறை ஜனாதிபதி சுற்றாடல் விருது 2024 இல் வெள்ளி விருதினையும் பெற்றுக் கொண்டது.

இவ்விருது வழங்கும் வைபவம் மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் ஒழுங்கு செய்யப்பட்ட BMICH மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை 28. 06.2024 மிகச் சிறப்பான முறையில் இடம் பெற்றது.

, கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு ஜனாதிபதி சுற்றாடல் வெள்ளி விருது!

Back to top button