கலை, கலாசாரம்
சிறை காவலர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது !

அகுனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் இரண்டாம் நிலை சிறைச்சாலையில் சிறை காவலர் ஒருவர் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக மொரட்டுவ தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
மொரட்டுவைஇ மொரட்டுவெல்லஇ மடம்கஹவத்தையிலுள்ள வீடொன்றில் வைத்து குறித்த சந்தேகநபர் 90 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அஹங்கம திட்டகல்ல கல சந்தியில் வசிக்கும் 26 வயதுடைய சந்தேகநபர் மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
மொரட்டுவ தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
, சிறை காவலர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது !









